கருப்பு திரைப்படத்தின் அப்டேட்..!

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஓ.டி.டி. உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக தொகைக்கு வாங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் 45-ஆவது படமான ‘கருப்பு’ படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தினை ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து உருவாகியுள்ளது. ‘கருப்பு’ திரைப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி 23 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்நிலையில், ‘கருப்பு’ படத்தின் ஓ.டி.டி. உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக தொகைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *