Advertisements

மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் படுகொலை சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன
தனது காரில் வைத்திருந்த 10 பவுன் நகையைக் காணவில்லையென மதுரையைச் சேர்ந்த பேராசிரியை நிகிதா கொடுத்த புகாரின் பேரில் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்ற இளைஞர் காவல் துறையால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டார்.
தற்பொழுது அஜித்குமாரின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வெளியாகி உள்ளது அதில் அஜித் குமார் உடலில் 50 இடங்களில் காயம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது இது தவிர அவரது வயிற்றில் லத்தியை வைத்துக் குத்தியதாகவும் மேலும் சிகரட்டை வைத்துச் சூடு போட்டதாகவும் தெரியவந்துள்ளது இது மட்டுமல்லாமல் அவரை லத்தியால் தலையில் தாக்கியதில் மூளையில் ரத்தக் கசிவும் ஏற்பட்டுள்ளது. உடலில் காது இதயம் மற்றும் கல்லீரல் பகுதிகளில் ரத்தக் கசிவுகள் ஏற்பட்டுள்ளன எனப் பிரேதபரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சாட்சி ஒருவர் கூறும்போது அஜித்குமாருக்கு கஞ்சா கொடுத்துப் போதையில் அவரைப் போலீசார் அடித்துத் துன்புறுத்தினர் இதை நான் நேரில் பார்த்தேன் என்று கூறியுள்ளார் . அஜித் குமாருக்கு கஞ்சா கொடுத்து அடித்த விவகாரம் மீண்டும் பூதாகரமாகியுள்ளது
இதற்கிடையே அஜித்குமார் மீது குற்றச்சாட்டு சொன்ன நிகிதா பற்றி ஏராளமான திடுகிடும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.
வேலை வாங்கி தருவதாக அவர் பலரிடம் பண மோசடி செய்துள்ளார் கிட்டத்தட்ட 60 லட்சம் ரூபாய் வரையில் அவர் மூன்று பேரிடம் பண மோசடி செய்துள்ளார் இதுகுறித்து காவல்துறையில் வழக்குகள் பதிவாகியுள்ளன.
நிகிதாவின் தந்தை ஜெயபெருமாள் மாவட்ட வருவாய் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவரது தாயார் சிவகாமி அம்மாளும் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர் .நிகிதா திண்டுக்கல்லில் உள்ள எம்வி எம் அரசு மகளிர் கல்லூரியில் தாவரவியல் பாடப்பிரிவில் துறை தலைவராகப் பணிபுரிந்து வருகிறார் அந்தக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளுக்கு மற்றும் சக ஆசிரியர்களுக்கு ஏராளமான டார்ச்சர் கொடுத்துள்ளார்.மாணவிகள் மத்தியில் பாடம் நடத்தும்பொழுது தகாத வார்த்தைகள் பேசியதாகவும் மனரீதியாகத் துன்புறுத்தியதாகவும் ஏராளமான புகார்கள் கல்லூரி முதல்வரிடம் தரப்பட்டுள்ள தகவல் இப்பொழுது வெளியே தெரியவந்துள்ளது .
இவரைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனப் பலர் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த பூங்கொடி இடம் புகார் மனு அளித்துள்ளனர் ஆனால் அந்தப் புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தற்பொழுது ஒரு வாரமாக நிகிதா கல்லூரிக்குச் செல்லவில்லை.
இதனிடையே நிகிதாவுக்கு ஏற்கனவே நான்கு முறை திருமணம் ஆகி இருக்கிறது இருந்தபோதிலும் அவருக்குக் குழந்தை இல்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது இதன் மூலம் திருமணம் செய்து கொண்டு அதிலும் நிகிதா மோசடியில் ஈடுபட்டுள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளியே தெரியவந்துள்ளது
நிகிதா மிகப்பெரிய மோசடி பேர்வழி .நகை திருட்டு போனதாக அவர் சொல்வது பொய்யாக இருக்கும் என அவரது நான்காவது கணவர் திருமாறன் தெரிவித்துள்ளார் இவர் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனராக இருக்கிறார். செய்தியாளர்களைச் சந்தித்து இவர் கூறும்பொழுது நிகிதாவிற்கு நான் தாலி கட்டிய அன்று இரவே அதாவது பால் பழம் சாப்பிடும் முன்பே மண்டபத்தை விட்டு ஓடிப் போனவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி எங்கள் திருமணம் நடந்தது நாங்கள் மிகப்பெரிய விஐபி குடும்பம் எனக்கு இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் தலைமையில்தான் திருமணம் நடந்தது .
நாய்க்குச் சோறு வைக்க வில்லையெனச் சண்டை போட்டு ஓடிப்போனவர் நிகிதா நாங்கள் காவல்துறை நீதிமன்றம் சென்றும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை கடைசியில் 10 லட்சம் ரூபாய் என்னிடம் வாங்கிக் கொண்டு விவாகரத்து கொடுத்தார் என்னைப் போல் அவர் பல பேரை ஏமாற்றி இருக்கிறார் இவர்கள் குடும்பத்திற்கு காவல்துறையின் முழு ஆதரவு இருக்கிறது
நிகிதா தனது நகை திருட்டு போனதாகச் சொல்வது பொய்யாகத் தான் இருக்கும் கோவில் காவலாளி அஜித் குமாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவரைப் பழி வாங்குவதற்காக இதைச் செய்திருப்பார் அவர் அப்படிப்பட்ட ஆள் எனவே நிகிதாவையும் முதல் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் எனத் திருமாறன் கூறியுள்ளார்.
இதற்கிடையே நடந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்த கோவில் அலுவலக ஊழியர் சத்தீஸ்வரன் கூறும்போது காவல்துறையில் சிலர்என்னை மிரட்டுகிறார்கள் நான் உயிருக்குப் பயப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்
இதனிடையே வீட்டையும் பூட்டி விட்டு எங்கேயோ சென்றுள்ள நிகிதா வீடியோ மட்டும் எடுத்து வெளியிட்டு வருகிறார் அதிலும் நகை திருட்டு குறித்து முன்னுக்கு பின்னாகத் தகவல் தருகிறார். இதுகுறித்து போலீசார் தற்பொழுது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
அந்த வகையில் விரைவிலேயே நிகிதா கைது செய்யப்படுவார் என்பது அடுத்த கட்ட முக்கிய செய்தியாகும்.
Advertisements
