மதுரை:
பெரியார்குறித்த விவாதங்கள் தீவிரமடைந்திருக்கும் இந்தச் சூழலில், நடிகை நயன்தாரா பெரியாரின் வார்த்தைகளை உச்சரித்திருப்பது அனைவரிடமும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது
மதுரையில் ‘FEMI 9 MEGA CELEBRATION – 2025’ நடைபெற்றது. இதில் உரையாற்றிய அவர், “என்னுடைய வாழ்க்கையில் நான் நம்பும் 2 விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இது தன்னம்பிக்கை குறித்த பேச்சோ அல்லது அட்வைஸோ கிடையாது. அதாவது நான் நம்பும் 2 விஷயங்களில் முதல் விஷயம் தன்னம்பிக்கை. இரண்டாவது சுயமரியாதை.
நம்மை யார் என்ன நினைத்தாலும், நம்மை யார் கீழே இறக்க நினைத்தாலும் இந்த 2 விஷயங்களை மட்டும் நாம் விட்டு விடக் கூடாது என நான் நினைக்கிறேன். இதை நீங்களும் பின்பற்றினால் வாழ்க்கை மிக அழகாக இருக்கும்.
நமக்கு நம் மீது தன்னம்பிக்கையும், மரியாதையும் இருந்தால் அதைவிட பெரிய விஷயம் வேற எதுவும் இருக்காது. தன்னம்பிக்கை எப்படி வரும் என்றால் நாம் உண்மையான கடுமையான முயற்சி எடுக்கும்போது வரும்.
வள்ளலாரை தாண்டிப் பெரியார் என்ன சீர்திருத்தம் செய்தார்? என்று கேள்வி எழுப்பிய சீமான், பெரியார் கூறியதாகச் சில தகவல்களையும் தெரிவித்திருந்தார். இவை திராவிட இயக்கத்தினரிடையே விவாதங்களை ஏற்படுத்தியது.
அவருக்கு எதிராகத் திராவிட கட்சிகள் போராட்டதை நடத்தியிருந்தன. அதேபோல, சீமான் மீது புகாரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. புகாரின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. நீதிமன்றமும் வழக்கை விரைந்து விசாரிக்க அறிவுறுத்தியுள்ளது.
இப்படி இருக்கையில் பெரியாரின் சுயமரியாதை எனும் வார்த்தையை நடிகை நயன்தார உச்சரித்திருப்பது பெரும் கவனம் பெற்றிருக்கிறது.