AIIMS Madurai: டெண்டர் அக்டோபர் 6ம் தேதிவரை நீடிப்பு!

Advertisements

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான கால அவகாசம் அக்டோபர் 6ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.
அதன்பிறகு எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிதி ரூ. 1978 கோடியாக உயர்த்தப்பட்டது. இந்த நிதியில் பாதித்தொகை ஜப்பானை சேர்ந்த ஜைக்கா நிறுவனத்திடமிருந்து கடனாகப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மதுரையில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்ட மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நடைபெறாமல் இருந்தது. 8 ஆண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லையென மத்திய அரசை மாநில அரசு குற்றம்சாட்டி வந்தது.
இந்த நிலையில், ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் எய்ம்ஸ் கட்டுமான பணிக்குக் கடன் வழங்க ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், 33 மாதங்களில் பணிகளை முடிக்க ஒப்பந்த காலமும் நிர்ணயிக்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் கட்டுமான பணியை மேற்கொள்வதற்கான ஒப்பந்ததத்திற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடபப்ட்ட செப்டம்பர் 18ம் தேதி கடைசி நாளெனக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.
இந்தச் சூழலில்  எம்ய்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளும் விண்ணப்பங்களின் காலக்கெடுவை அக்டோபர் 6ம் தேதிவரை நீட்டித்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தரப்பில் 2026ம் ஆண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டிற்கு வர வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில், 870 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை வளாகம், மருத்துவ மாணவர்கள் படிப்பதற்கான வகுப்பறைகள், மாணவர்கள் தங்கும் விடுதிகள்,  உணவகம் உள்ளிட்ட கட்டிட பணிகளுக்கு ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *