வட்டி விகிதத்தில் மாற்றமில்லை..!

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் மாற்றமின்றி ஐந்தேகால் விழுக்காடாகத் தொடரும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா அறிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையகத்தில் ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா பணக்கொள்கையை அறிவித்தார்.  அப்போது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகாலக் கடன்களுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி ஐந்தே கால் விழுக்காடாக இருக்கும் என்று அறிவித்தார். இதேபோல் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்துள்ள தொகைக்கான வட்டி விகிதமும் எந்த மாற்றமும் இன்றி 5 விழுக்காடாகத் தொடரும் என்று அறிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காட்டுக்கு மேல் நீடித்து வரும் நிலையில் அதேபோக்கு தொடர்ந்து நீடிப்பதற்காக வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று பொருளாதார நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *