
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் அதிமுக பூத் வாரியாக தகவல் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர் சேர்த்தல் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அதிமுக கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பூதமங்கலம், மங்கலம், வேடந்தவாடி, நூக்கம்பாடி உள்ளிட்ட 21 ஊராட்சிகளில் பூத் வாரியாக தகவல் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர் சேர்த்தல் மற்றும் ஆலோசனை கூட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ். ராமச்சந்திரன் கலந்து கொண்டு நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரும் நிலையில் பூத் வாரியாக தகவல் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர் சேர்த்தல் பணியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரங்கநாதன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் அருள்பழனி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் சம்பத், மாவட்ட பிரதிநிதி குமரகுரு, ஒன்றிய பொருளாளர் பழனி, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




