AIADMK:ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிசாமி!

Advertisements

சென்னை:அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

சமத்துவம்-சமூகநீதி தழைக்க, ஜாதி-மதசார்பற்று அனைவரும் அனைத்தும் பெற, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கண்டெடுத்து, புரட்சித்தலைவி வளர்த்த, எனது தலைமையிலான மாபெரும் இயக்கமாம் அதிமுகவின் 53வது துவக்க விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ‘புரட்சித் எம்,ஜி.ஆர் தலைவர்மீதான எனது அன்பும் அபிமானமும், சென்னையில் நான் வளர்ந்ததில் ஒரு அங்கம். அது இன்னும் அப்படியே இருக்கிறது. ‘அதிமுகவின் 53-வது தொடக்க நாளான அக் 17ஆம் தேதி புரட்சித் தலைவரின் அன்பர்கள், அபிமானிகள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் என்று பவன் கல்யாணம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *