
குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது; பயணிகள் 242 பேர் கதி என்ன?
குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து 242 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து மதியம் 1.17 மணிக்கு நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கிய விமானம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமானது.இந்த விமானத்தில் பயணிகள் 242 பேர் பயணம் செய்துள்ளனர். விழுந்து நொறுங்கிய விமானத்தில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. விமானத்தில் பயணம் செய்த பயணிகளையும் தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் விண்ணை முட்டும் அளவுக்குக் கரும் புகைகள் சூழ்ந்துள்ளது. ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரியும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
படுகாயங்களுடன் பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வீடுகள்மீது விமானம் விழுந்து நொறுங்கியது தொடர்பாகக் குஜராத் முதல்வருடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார். 7 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க முயற்சி ஈடுபட்டுள்ளனர். 80 பேர் கொண்ட மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப்படையின் மூன்று குழுவினர் ஆமதாபாத் விரைந்து உள்ளனர்.
