
Afghanistan | Ban | Women
தேசிய பூங்காக்களுக்குப் பெண்கள் செல்லக் கூடாது என்று தலிபான்கள் மேலும் ஒரு தடை விதித்துள்ளனர்…
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள், பெண்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள்.

உயர்நிலை கல்வி பயிலப் பெண்களுக்குத் தடை விதித்தனர். பல்கலைக்கழகங்கள், அரசு சாரா நிறுவனங்கள் போன்றவற்றில் பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தேசிய பூங்காக்களுக்குப் பெண்கள் செல்லக் கூடாது என்று தலிபான்கள் மேலும் ஒரு தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து தலிபான் அரசின் நல்லொழுக்கம் துறை துணை மந்திரி காலித் ஹனாபி கூறும்போது, ‘பூங்காவுக்குச் செல்லும்போது பெண்கள் ஹிஜாப் அணிவதில் சரியான முறையைக் கடைபிடிப்பதில்லை.
பெண்கள் பூங்காவுக்குச் செல்வதற்கான விதிமுறைகள் தயாராகி வருகின்றன. அதுவரை பெண்கள் பூங்காவுக்குச் செல்லத் தடை விதிக்கப்படுகிறது என்றார்.

