டெல்லி சட்டப்பேரவை தேர்தல்!

புதுடெல்லி: 

மொத்தம் 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைகிறது. இதையொட்டி தேர்தல் அறிவிப்பு ஜனவரியில் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 11 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி ஆம் ஆத்மியில் இணைந்த6 பேரின் பெயர்களும் உள்ளன.

பிரம்ம சிங் தன்வார் (சத்தார்பூர்), அனில் ஜா (கிராரி), பி.பி.தியாகி (லட்சுமி நகர்) ஆகிய மூவரும் சமீபத்தில் பாஜகவை விட்டு விலகி ஆம் ஆத்மியில் இணைந்தவர்கள். ஜுபேர் சவுத்ரி (சீலாம்பூர்), வீரசிங் திங்கன் (சீமாபுரி), சோமேஷ் ஷோகீன் (மட்டியாலா) ஆகியோர் காங்கிரஸை விட்டு விலகி ஆம் ஆத்மியில் இணைந்தவர்கள் ஆவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *