
சீனாவில் பன்றி இறைச்சியுடன் கலப்படம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட ஆயிரம் பூனைகளை போலீசார் மீட்டனர்.
அசைவ உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சீனாவில் பன்றி இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்யும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜங்ஜியாகங்க் பகுதியில் பூனைகள் இறைச்சிக்காக கொல்லப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் அங்குள்ள தெருக்களில் விலங்கு நல ஆர்வலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மரப்பெட்டியில் பூனைகள் அடைத்து வைத்து எடுத்து செல்லப்பட்டதை பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மரப்பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரம் பூனைகளை மீட்டனர். விசாரணையில், பூனைகள் இறைச்சிக்காக எடுத்து செல்லப்பட்டது தெரியப்பட்டது. பூனைகளில் இறைச்சியை ஒருவாரம் வரை பதப்படுத்தினால், அது பற்றி இறைச்சியை போல் காணப்படுவதால், அதை கொண்டு சந்தையில் பன்றி மற்றும் ஆட்டு இறைச்சியுடன் பூனை இறைச்சிகளையும் கலந்து விற்பதும் தெரிய வந்துள்ளது.
சந்தையில் பன்றி இறைச்சியுடன் சேர்த்து விற்கப்படும் ஒரு பவுண்டு பூஜை இறைச்சியின் விலை ரூ.332 என்றும், ஒவ்வொரு பூனையும் பதப்படுத்திய பிறகு 4 முதல் 5 பவுண்டுகள் வரை எடை இருக்கும் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் அதிகளவில் பூனைகளை பன்றி இறைச்சியுடன் கலந்து விற்கப்பட்டு வந்துள்ளது.



