
பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் , மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
பழனி மலையடிவாரத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலத்தை 2 கோடி ரூபாய்க்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் முருகதாஸ், வெள்ளைத்துரை, சேதுபதி , வழக்கறிஞர் அன்வர்தீன், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை 12- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இதில் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழந்துள்ளார். இவருக்கு, மதுரை மத்திய சிறையில் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதனால், இந்த வழக்கில் மேலும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


