அதிமுக பாஜக கூட்டணி உடைகிறதா? கோபத்தில் அமித்ஷா அதிரடி முடிவு.!

Advertisements

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இடையே தொடர் மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் அதிமுக பாஜக கூட்டணியே உடைந்து விடுமோ என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. தற்பொழுது உள்துறை அமைச்சர் அமித்ஷா எடப்பாடி பழனிச்சாமி அல்லாது வேறுவிதமான சில முடிவுகளை எடுத்து மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அவரது புதிய அரசியல் பயணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த காலங்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது கூட்டணி அமைச்சரவை அமையும் என்று கருத்து தெரிவித்தார் அது மட்டுமல்லாமல் யார் முதல்வர் வேட்பாளர் என்பதையும் அவர் வெளிப்படுத்தவில்லை. அதிமுக பாஜக கூட்டணியின் மோதல் விவகாரம் இங்கிருந்துதான் தொடங்கியது.

அதிமுகவை பொருத்தவரையில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் அதே சமயம் பாஜக தரப்பில் என்ன முடிவு எடுத்து வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் அதிமுக பாஜக கூட்டணியில் இணையும் இதன் மூலம் மிக எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்று ஒரு கணக்கு போடப்பட்டு வந்தது.

இதனால் உள்துறை அமைச்சர் அமித்ஷா வேறுவிதமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. எப்படியும் எடப்பாடி பழனிச்சாமி தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைத்து விடுவார் என்ற நம்பிக்கையோடு இருந்தார். தற்பொழுது அதிமுகவுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணியில் இல்லை என்ற முடிவுக்கு வந்த நிலையில் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற குரல் மேலோங்கி
இருக்கிறது.

இது தொடர்பான உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்று டெல்லி மேல் இடத்திற்கு சென்றது . அதிமுகவை ஒருங்கிணைத்து தேமுதிக , பாட்டாளி மக்கள் கட்சி,  டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் , ஜான்பாண்டியனின் தமிழக முன்னேற்ற கழகம்,  பாரிவேந்தரின் ஜனநாயக கட்சி ஆகியவற்றை ஒருங்கிணைத்தால் வெற்றிக்கு வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே அதிமுக பாஜக கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பதில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. முதல் கட்டமாக ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் சசிகலா ஆகியோரை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு எடப்பாடி பழனிச்சாமி திட்ட வட்டமாக மறுப்பு தெரிவித்து வருகிறார்.

அடுத்த கட்டமாக பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரையில் இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது அன்புமணி மற்றும் ராமதாசை ஒருங்கிணைக்க முடியவில்லை. அடுத்த கட்டமாக தேமுதிகவை பொருத்தவரையில் அதிகப்படியான தொகுதிகளும் தேர்தல் செலவுக்குறிய பண வசதிகளும் கேட்டு வருகிறார்கள் எனவே அதிலும் முடிவு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சிலர் நம்முடன் கூடவே இருந்து கழுத்தறுக்கிறார்கள் என்கிற ரீதியில் கருத்து தெரிவிக்கப்பட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிகிறது. இது மட்டுமல்லாமல் உள்துறை அமைச்சர் அமித்ஷா எடப்பாடி பழனிச்சாமி உடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.

இதனிடையே தான் முதல்கட்டமாக ஓ பன்னீர்செல்வத்தை அமித்ஷா டெல்லிக்கு அழைத்து பேசினார் . அடுத்தபடியாக டிடிவி தினகரனை சந்தித்து பேசும் படி அண்ணாமலைக்கு உத்தரவிட்டார் . இதனை தொடர்ந்து அண்ணாமலையை டெல்லி க்கு அழைத்து பேசினார். இதற்கிடையே சசிகலாவுடனும் திரை மறைவில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்கிறார்கள்.

எனவே அதிமுகவுடன் ஒருங்கிணைக்க முடியாத ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் சசிகலா ஆகியோரை தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்வது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது புதிய முடிவுக்கு வந்திருக்கிறார். இதனிடையே உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் மூலம் நடத்தி வரும் பேச்சு வார்த்தைகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

எடப்பாடி பழனிச்சாமி உடன் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நைனார் நாகேந்திரன் சந்தித்து பேசிய போது அண்ணாமலை மீதான தனது கருத்தை எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படுத்தியிருக்கிறார். டெல்லி மேலிடம் தற்பொழுது அண்ணாமலையை அனைத்து பணிகளுக்கும் தூது விட்டு வருகிறது. அவரை அடிக்கடி டெல்லிக்கு அழைத்து பேசுகிறார்கள். அவரது செயல்பாடுகள் எல்லாம் அதிமுகவுக்கு எதிராகவே இருக்கிறது இதை நீங்கள் டெல்லி மேல் இடத்தில் எடுத்துச் சொல்லுங்கள் என பேசியிருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நைனார் நாகேந்திரனும் டெல்லிக்கு அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் அதிமுக பாஜக மற்றும் கூட்டணி மட்டுமே இருந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது . ஏனென்றால் வருகிற தேர்தல் நான்கு முனைத் தேர்தலாக இருக்கிறது.  எனவே அடுத்த கட்டமாக புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி மேலிடம் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி எடுத்திருக்ககும் முடிவுகளால் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்தவித லாபமும் இருப்பதாக தெரியவில்லை.  இது தவிர 50 தொகுதிகள் தேவை என கோரிக்கை வைத்த போது 30 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என எடப்பாடி பழனிச்சாமி அடம்பிடிக்கிறார். எனவே அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும் ஆட்சியில் எந்த வித அதிகாரமும் இல்லை. அதேசமயம் தமிழகத்தில் அதிகப்படியான சட்டமன்ற உறுப்பினர்களை பெறவும் வாய்ப்பு இல்லை.

எனவே ஏன் கூட்டணியை முறித்து விட்டு பாஜக தலைமையில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்க கூடாது என்ற எண்ணம் டெல்லி மேலிடத்தற்கு ஏற்பட்டு இருக்கிறது. அதாவது அதிமுகவை கழற்றிவிட்டு பாஜக தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்யப் போவதாக தெரிகிறது.அப்படி வரும் பொழுது பாஜக கூட்டணியில் ஓ பன்னீர்செல்வம் , டி டி வி தினகரன் சசிகலா ஆகியோர் இணைக்கப்படுவார்கள் .

இது மட்டுமல்லாமல் தேமுதிக,  பாட்டாளி மக்கள் கட்சி , டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி , ஜான் பாண்டியனின் தமிழகம் முன்னேற்றக் கழகம் கட்சி,  பாரிவேந்தரின் ஜனநாயக முன்னேற்ற கட்சி என அனைவரையும் பாரதிய ஜனதா கட்சியின் கீழ் ஒருங்கிணைத்து ஏன் போட்டியிடக் கூடாது என்ற திட்டத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா வகுத்து வருவதாக தெரிகிறது.

இதன் நிமித்தமாகத்தான் அவர் அண்ணாமலை மற்றும் நைனார் நாகேந்திரனை டெல்லிக்கு அழைத்து பேசுவதாக தெரிகிறது. பாஜக தலைமையில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிடும் பொழுது கட்சியின் பலம் அதிகரிக்கும் தேவைப்பட்ட தொகுதிகளில் நாம் போட்டியிடலாம் என்றெல்லாம் பலவித கணக்கு போட்டு வைத்திருக்கிறார்கள்.

அப்படி வரும் பொழுது தமிழ்நாட்டில் 5 முனைப் போட்டி நிலவும் அதாவது திமுக அதிமுக பாஜக தாவேக நாம் தமிழர் என ஐந்து முனை போட்டி நிலவும். வருகிற தேர்தலில் இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் எந்த கட்சியும் மெஜாரிட்டி பெற முடியாது. அந்த சமயத்தில் ஆட்சி அமைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியின் தயவு தேவைப்படும் இதனை சாக்காக வைத்துக்கொண்டு அமைச்சரவையிலும் இடம் பெற்று விடலாம் என்றெல்லாம் ஏராளமான திட்டங்களை டெல்லி மேல் இடம் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

ஏற்கனவே பல மாநிலங்களில் இது போன்று தான் திரைமறைவு திட்டங்களை தீட்டி இறுதிக்கட்டத்தில் கூட்டணியை சேர்த்து ஆட்சியைப் பிடிப்பது பாரதிய ஜனதா கட்சியின் கடந்த கால வரலாறாக இருக்கிறது. எனவே தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படலாம். குறிப்பாக , அதிமுக பாஜக இடையே எந்த நேரமும் விரிசல் ஏற்பட்டு உடைந்து சிதறலாம் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

ஒருங்கிணைப்புக்கு வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறிவரும் நிலையில் நிச்சயமாக மெகா கூட்டணி அமையும் என்று சொல்லி வருகிறார் ஆனால் அந்த மெகா கூட்டணி யார் என்பது தெரியவில்லை. எனவே அதிமுகவை பொருத்தவரையில் இழுபறியான ஒரு சூழ்நிலை இருக்கிறது.  அந்த வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா எடப்பாடி பழனிச்சாமி இடையே இன்னும் மோதல் போக்குகள் தொடருமானால் நிச்சயமாக கூட்டணி உடைய வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *