Adam Alaihis Salam: என் இறைவன் என்மீது இன்று கடும் கோபம் கொண்டிருக்கிறான்!

நான் செய்த தவற்றின் காரணத்தால் என் இறைவன் என்மீது இன்று கடும் கோபம் கொண்டிருக்கிறான்…

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறுவார்கள் நான் செய்த தவற்றின் காரணத்தால் என் இறைவன் என்மீது இன்று கடும் கோபம் கொண்டிருக்கிறான். இதற்கு முன் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை இதற்குப் பிறகும் அவன் இதைப் போன்று கோபம் கொள்ளப் போவதில்லை. நான் நெருங்கக்கூடாத ஒரு மரத்திலிருந்து உண்ண வேண்டாம் என்று என்னை இறைவன் தடுத்தான் நான் அவனுக்கு மாறு செய்து விட்டேன்.

எனவே என்னை நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது என்று கூறிவிட்டு நீங்கள் வேறு எவரிடமாவது செல்லுங்கள் நீங்கள் இறைத்தூதர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் செல்லுங்கள் என்று சொல்வார்கள். உடனே மக்கள் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று

நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு அனுப்பப்பட்ட முக்கியமான இறைத்தூதர் ஆவீர்கள் உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் அவல நிலையை எங்களுக்கு நேர்ந்திருக்கும் துன்ப நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா என்று கேட்பார்கள். அதற்கு நூஹ் அலைஹிஸ்லாம் அவர்கள் என் இறைவன் இன்று என்மீது கடும் கோபம் கொண்டுள்ளான்.

இதற்கு முன் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை இதற்குப் பிறகும் அவன் இதைப் போன்று கோபம் கொள்ளபோவதுமில்லை எல்லா நபிமார்களுக்கும் இருப்பதைப் போன்று விசேஷமான பிரார்த்தனை ஒன்று எனக்கு வழங்கப்பட்டிருந்தது அதை நான் என் சமுதாயத்தாருக்கு எதிராகப் பயன்படுத்தி விட்டேன். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. என்று கூறிவிட்டு நீங்கள் இறைவனின் உற்ற நண்பர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் செல்லுங்கள் என்று நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறி விடுவார்கள்.

என் சமுதாயமே.2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *