
கிரகணம் என்றால் என்ன? உங்களுக்குத் தெரியுமா!
சூரிய கிரகணம் என்றால் என்ன ? சந்திர கிரகணம் என்றால் என்ன ?
பூமியை பொருத்தவரை ஓர் ஆண்டில் இரண்டிலிருந்து ஐந்து வரையிலான சூரிய கிரகணங்கள் ஏற்படக்கூடும். ஒருமுறை முழு சூரிய கிரகணம் உண்டான அதே இடத்திலேயே, மீண்டும் தோன்ற ஏறத்தாழ 375 ஆண்டுகள் ஆகும். முழு சூரிய கிரகணகங்கள், இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையே நிகழ்கின்றன. இது அறிவியல் பூர்வமானது. அதேபோல், சூரிய கிரகணம் நிகழ்ந்து சரியாக 15 நாட்களில் சந்திர கிரகணம் நிகழும்.

சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில், சூரியன்-சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. கிரகணத்தின்போது சூரியனின் ஒளி பூமி மீது பதியாமல் தடைபடுகிறபொழுது, இயற்கையில் சில மாற்றங்கள் தானாகவே நிகழும்.இதில் என்ன இருக்கிறது? நல்லதா? கெட்டதா? நல்லதை விடக் கெடுதலே அதிகம் உள்ளதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அக்டோபர் 14 ஆம் தேதி சனிக்கிழமை நாளான மகாளய அமாவாசை அன்று சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8.34 மணி தொடங்கி நள்ளிரவு 2.25 மணிவரை சூரிய கிரகணம் நடக்க உள்ளது. அதனால் இந்தியாவில் இந்தச் சூரிய கிரகணம் தெரியாது. இந்தச் சூரிய கிரகணம் அமெரிக்காவில் நன்றாகத் தெரியும் நெருப்பு வளையம்போலக் காட்சி அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மெல்லிய நெருப்பு வளையம்போல் தெரியும். இந்தியாவில் இந்தக் கிரகணத்தைப் பார்க்க முடியாது.
சூரிய கிரகணம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்த்தால், நம் கண்கள் பாதிக்கப்படும். ஏனென்றால், சூரியனின் புற ஊதா கதிர்வீச்சு விழித்திரையை சேதமாக்கி பார்வை குறைபாட்டினை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் சமையல் செய்யக் கூடாது. முக்கியமாகச் சாப்பிடக் கூடாது. தண்ணீர் குடிக்கக் கூடாது. நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யக் கூடாது. உடல் உறுப்பு சம்பந்தமான நோய்கள் வரக்கூடும். முக்கியமாகக் கர்ப்பிணி பெண்களை அதிகம் பாதிக்கும். கிரகணத்தின்போது வெளிப்படும் கதிர் வீச்சுகள் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய தன்மையது. பிறக்கக்கூடிய குழந்தைகளுக்குச் சில உடல் உறுப்புக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
சாஸ்திரப்படியான கருத்துக்கள் ஏதேனும் உள்ளதா?
ராகு மறைக்கும்போது ராகு க்ரஷ்தம் என்றும், கேது மறைக்கும்போது கேது க்ரஷ்தம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. பொதுவாகக் கிரகண தோஷம் கெடு பலன்களைத் தான் தரும் என்பார்கள். சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வதுண்டு. கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குக் கிரகண தோஷம் ஏற்படுகிறது என்பது, பொதுவான ஜோதிட கணிப்பாக இருக்கிறது.
அக்டோபர் 28 ஆம் தேதி பவுர்ணமி நாளில் சந்திர கிரகணமும் ஏற்பட உள்ளது. சந்திர கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 28ம் தேதி ஏற்படும் சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இரவு 11.31 மணிக்குத் தொடங்கி 29ம் தேதி அதிகாலை 3.56 மணிவரை நீடிக்க உள்ளது. அதனால் இந்தக் கிரகணம் இந்தியாவில் மிகவும் தெளிவாக வெறும் கண்ணால் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசாவின் இணைய தள பக்கத்தில் சூரிய கிரகணம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. பூமியில் உள்ள எந்த ஒரு இடத்திலும் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது என்று அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.


