Bakrit festival:இஸ்லாமியர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!

இறைவனின் தூதரான இப்ராஹீமின் தியாகத்தைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய 12-வது மாதமான துல் ஹஜ்ஜின் 10-வது நாளில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது.

சென்னை:பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களால் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாகக் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும்.

இறைவனின் தூதரான இப்ராஹீமின் தியாகத்தைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய 12-வது மாதமான துல் ஹஜ்ஜின் 10-வது நாளில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது.

இந்தப் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. பக்ரீத் பண்டிகை கொண்டாடிய முஸ்லிம்கள், ஏழை மக்களுக்குக் குர்பானியாக ஆடு, மாடு உள்ளிட்டவற்றின் இறைச்சியை தானமாக அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *