
தொட்டுக்கவா? இருக்கவே இருக்கு .. அவியல் தான் வேறென்ன..அனைத்து காய்களும் சேர்த்து தேங்காய் எண்ணெயில் செய்யப்படும் இந்த சைடு டிஷ் உடலுக்கு மிகவும் ஏற்றது.
தென்னிந்திய உணவுகளில் தனித்துவமான சுவை கொண்டவையாக உள்ளன. இந்த உணவுகளில் அவியில் மிகவும் புகழ் பெற்ற சைடிஷ்ஷாக உள்ளது. இந்த அய்யர் வீட்டு ஸ்டைல் அவியல் தயார் செய்யலாம் வாங்க..
தேவையான பொருட்கள்;
வாழைக்காய் – 1
கேரட் – 2

முருங்கைக்காய் – 1
பீன்ஸ் – 10
சேனைக் கிழங்கு – 150 கிராம்
கொத்தவராய் (ஈத்திகாய்) – 10

அவரைக் காய் – 10
வெள்ளை பூசணி – 150 கிராம்
கத்திரிக்காய்- 3

தேங்காய் 1
பச்சை மிளகாய் – 5
சீரகம் – 1 ஸ்பூன்
உப்பு

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 3 கரண்டி
கறிவேப்பிலை
தயிர் – சிறிய 1 கப் (அதிக புளிப்பு இல்லாதது)
செய்முறை;
முதலில் காய்களை சுத்தம் செய்து நீள வாக்கில் குழம்பிற்கு வெட்டுவது போல நீளமாக வெட்டிக்கொள்ளவும். அதன் பின்னர், ஒரு காடாய் எடுத்து அதில் வெட்டி வைத்துள்ள காய்கறிகளை சேர்க்கவும்.
பூசணியை தவிர, மற்ற காய்கறிகள் ஓரளவு வெந்த பிறகு சேர்க்கவும். அவை வேக உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி நன்கு வேக வைக்கவும்.
அவியலுக்கான மசாலாவிற்கு சீரகம், பச்சை மிளகாய், தேங்காய் ஆகியவற்றை ஒரு மிக்சியில் இட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
காய்கறிகள் நன்றாக வெந்த பிறகு அவற்றில் அரைத்து வைத்துள்ள இந்த தேங்கய் கலவையை சேர்க்கவும்.
அதோடு தயிரும் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வேக விடவும். 2 நிமிடத்திற்கு பிறகு கருவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றி மீண்டும் வேக வைக்கவும்.
கரண்டியால் ஒரு முறை கிளறி விடவும் . இப்போது சூடான பல காய்கள் சேர்ந்த அவியல் தயார்…

