
இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதியில் உள்ளது பெசண்ட் நகர் .
கடற்கரையில் அமைந்துள்ள இத்தேவாலயம் மிகவும் பழமை வாய்ந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. கலைநயமிக்கது. தினமும் ஆயிரக் கணக்கானோர் வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.
சென்னை மாநகராட்சியில் உள்ள கடலை ஒட்டிய ஒரு பகுதியாகும். பெசன்ட் நகர் சுற்றுப்புறத்தில் அதிக வசதி படைத்த மக்கள் வசிக்கின்றனர். சென்னையின் முன்னாள் கவர்னரான எட்வர்ட் எலியட்டின் பெயரிடப்பட்ட எலியட்ஸ் கடற்கரை, இந்த பகுதியின் பிரபலமான இடமாகும். இது இளைஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் ஒரு கவர்ச்சியான இடமாக மாறிவிட்டது.

அமைவிடம்;
சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், பெசன்ட் நகர் அமைந்துள்ளது.
பெசன்ட் நகர் மற்றும் எலியட்ஸ் கடற்கரையின் வான்வழி காட்சி;
பெசன்ட் நகர் 5-ஆவது அவென்யூவில் உள்ளது வேளாங்கண்ணி அன்னை திருத்தலம். இது சின்ன வேளாங்கண்ணி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இங்கு அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் மிகவும் பிரசித்தி பெற்றது.
பேருந்து பணிமனை;
பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தில், 85 வெவ்வேறு பேருந்துகள் தினமும் 500 பயணங்களை மேற்கொள்கின்றன. ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 பேர் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

அக்டோபர் 2012 இல், பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தை, ஒரு பணி மனையாக மாற்ற மாநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்.டி.சி.) முடிவு செய்தது. பணிமனை, பேருந்து நிலையத்தை விட 70 சதவீதம் பெரியதாக இருக்கும். 5 மில்லியன் டாலர் செலவில் இந்த பேருந்து பணிமனை கட்டி முடிக்கப்பட்டது.
இத்திருத்தலம் ஒரு சிறப்பு வாய்ந்த ஜெப தலமாக விளங்குகிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் இத்தேவாலயத்தில் கூட்டம் அலைமோதும். சாதி, மத , இன பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் அன்னைவேளாங்கண்ணியை வணங்கிச் செல்வர்.
மெழுவர்த்தி ஏற்றி தங்களது கோரிக்கையை வைப்பர். குளிர்ந்த கடல் காற்றை சுவாசித்துக் கொண்டே ஜெபம் செய்வது ஒரு தனி சுகம் தரும் அனுபவமாக இருக்கும்.

