Today Gold Rate In Chennai: அட கடவுளே.. 3 நாள் இறங்கிய தங்கம்.. இன்று ஒரே நாளில் உயர்ந்தது..!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தைக் காணலாம்.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள்மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாகத் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.53,000-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,625-க்கு விற்பனையானது.

இன்றைய (ஜூன் 28) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ரூ.53,328-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.41 உயர்ந்து ரூ.6,666-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,136-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.57,088-ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.94.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.94,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *