முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமிக்கு, ஓமந்தூரார் அரசினர் மருத்துவ கல்வி வளாகத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திரப் போராட்ட வீரர் ஓமந்தூர் ராமாசாமி தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளார். இதில், சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ்நாட்டின் தலைசிறந்த அரசியல் தலைவருமான ஓமந்தூர் ராமாசாமிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவ கல்வி வளாகத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்திய நாடு விடுதலை அடையும் போது சென்னை மாகணத்தின் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி, ஐதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இனைத்த கம்பீரமான நடவடிக்கைக்கு ஒரு காரணமாகவும் திகழ்ந்தவர் என்று புகழாரம் சூட்டினார்.


