மீனவர்கள் 35 பேரை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க விஜய் கோரிக்கை.!

Advertisements

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் 35 பேரை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே தமிழக மீனவர்கள் மீதும் காட்டி, இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும் எனக் வலியுறுத்திள்ளார்.

இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை மத்திய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *