Advertisements

வடலூரில் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி பொதுமக்கள் திடீர் போராட்டம்.
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது.
இந்த சத்திய ஞான சபை 100 ஏக்க நிலப்பரப்பில் அமைந்துள்ள நிலையில் அதில் சர்வதேச மையம் கட்ட தமிழக அரசு முடிவு.
100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த சர்வதேச மையம் அமைப்பதற்கு கடந்த மாதம் பணிகள் துவங்கியது.
கட்டிடம் கட்டுவதற்கு இன்று பள்ளம் தோண்டப்பட்டது; இந்த பள்ளத்தில் இறங்கி பார்வதிபுரம் கிராம மக்கள் தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சத்திய ஞான சபை பெருவெளியில் இந்த மையம் அமைக்க கூடாது எனவும் அரசு இடத்தில் அமைக்க கோரியும் போராட்டம்.
தைப்பூச தினத்தன்று பல லட்சம் பேர் கூடும் இடத்தில் சர்வதேச மையம் மையம் அமைத்தால் பாதிப்பு ஏற்படும் எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு.
பள்ளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் தற்பொழுது போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
பதட்டம் காரணமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Advertisements

