
Accident
கோட்டகுப்பம் அருகே சாலை தடுப்பு மீது மோதி அரசு விரைவு பஸ் விபத்துக்குள்ளானது…
விழுப்புரம்: அரசு விரைவு பஸ் ஒன்று இன்று காலையில் கிழக்கு கடற்கரை சாலை வழியாகக் கும்பகோணம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கோட்டகுப்பம் அருகே வந்தபோது திடீரெனப் பஸ் சாலை தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ்சிலிருந்து 15-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


