Advertisements
வருமான வரித்துறை அதிகாரிகள் அபிராமி ராமநாதனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் விசாரணை!
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் தொழிலதிபருமான அபிராமி ராமநாதனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நேற்று மாலை 4 மணி முதல் 12 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இன்றும் சோதனை நீடித்தது. வீட்டில் கணக்கில் வராத நகைகள் கைப்பற்றப்பட்டன. அது குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், அபிராமி ராமநாதனை விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.