“அதிமுகவை போல் திமுகவும் அழியும்!” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி.!

இன்றைக்கு அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுகவுக்கும் ஏற்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைக்க 28 ஆம் தேதி மதுரை வரும் முதலமைச்சர் விஜய், காந்தி மியூசியத்தைத் திறந்து வைக்க உள்ளதாகத் தெரிவித்தார். வீரமணியை காப்பாற்றும் வேலையில் இப்போதும் திமுக ஈடுபடுவதாகக் கூறினார்.

திமுக ஆட்சி காலத்தில் மூடி மறைக்கப்பட்ட வழக்குகள் எத்தனை? என்று கேள்வி எழுப்பினார். வீரமணி வழக்கில், துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் என்ன செய்தார்? என்றும் வினவினார். எடப்பாடி பழனிசாமியின் சுயநலம் காரணமாக அதிமுகவிலிருந்து தலைவர்கள் வெளியேறுவதாக கூறினார்.

தற்போது உள்ளது எடப்பாடியின் அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த அதிமுக இல்லை என்று தெரிவித்தார். மேலும், இன்றைக்கு அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுகவுக்கும் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *