டாக்கரில் நடைபெற்ற 4ஆவது இளையோர் ஒலிம்பிக் போட்டிகளின் குத்துச்சண்டைப் பிரிவில், இந்தியா இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
செனகல் தலைநகரமான டாக்கர் நகரில் நான்காவது இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில், ஆண்களுக்கான குத்துச்சண்டை 50 கிலோ எடைப் பிரிவின் இறுதிச்சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் அம்பேகர் மீதேய், அயர்லாந்தின் கிறிஸ்டியன் ஜூபானியை எதிர்கொண்டு மோதினார். இதில் மிகவும் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர் அம்பேகர் மீதேய் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இதேபோல் மகளிர்களுக்கான குத்துச்சண்டை 48 கிலோ எடைப் பிரிவின் இறுதிச்சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை குஞ்சன், அல்ஜீரியாவின் பவுதைனா பென்ச லாவை எதிர்கொண்டார். இதில் குஞ்சன் 5-0 என்ற கணக்கில் பென்ச லாவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.



