நகைச்சுவை கலந்த ஹாரர் திரில்லர் – நெப்போலியனின் ‘அமெரிக்க ஆவி’!

பிரபல நடிகர் நெப்போலியன் நடிக்கும் ‘அமெரிக்க ஆவி’ திரைப்படம் நகைச்சுவை கலந்த ஹாரர் திரில்லராக உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகர் நெப்போலியன் ‘அமெரிக்க ஆவி’ என்ற புதிய படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர். இயக்கத்தில், இசையமைப்பாளர் ஆதிஷ் உத்ரியன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில், ஊர்வசி, அர்லோ, ஐஸ்வர்யா, ரவி, பிரகாஷ், ஸ்டான்லி, ராகுல், வெங்கி, அருணாசலம், பார்வதி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையில் நகைச்சுவை கலந்த ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  அடுத்த மாதம் திரையரங்கில் இத்திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அவரது ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *