
இளம் நடிகை ஒருவர், தான் நடித்த முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்னரே மூன்று முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளைத் தட்டி தூக்கி உள்ளார்.
தெலுங்கு திரையுலகம் சமீபகாலமாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து பான் இந்தியா ஹிட் படங்களைக் கொடுத்து வந்த தெலுங்கு திரையுலகம், புதுப்புது நடிகைகளையும் அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. தற்போது சென்சேஷனல் ஹீரோயின்களாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, பூஜா ஹெக்டே, மிருணாள் தாக்கூர் போன்றவர்களை மக்கள் மத்தியில் பிரபலமாக்கிய பெருமை தெலுங்கு படங்களையே சேரும்.
அந்த வரிசையில் தற்போது மற்றுமொரு புது நடிகையைக் களமிறக்கி இருக்கிறது டோலிவுட். அவர் பெயர் பாக்கியஸ்ரீ போர்ஸ். இதென்ன கேள்விபடாத பெயராக இருக்கு என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இனி வரும் ஆண்டுகளில் அங்கு ஒரு புயலை கிளப்ப காத்திருக்கிறார் பாக்கியஸ்ரீ. ஒருபக்க சாயலில் ராஷ்மிகா போலவும், மறுபக்க சாயலில் கீர்த்தி சுரேஷ் போலவும் இருக்கும் பாக்கியஸ்ரீ தான் தற்போது டோலிவுட்டின் டிரெண்டிங் குயின்.
அவர் நடித்த முதல் படம் மிஸ்டர் பச்சன். இப்படத்தில் ரவிதேஜாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் பாக்கியஸ்ரீ. அந்தப் படத்தின் டிரெய்லர் கூட இன்னும் ரிலீஸ் ஆகவில்லை அதற்குள் மூன்று பிரம்மாண்ட படங்களில் நடிக்கக் கமிட்டாகிவிட்டார் பாக்கியஸ்ரீ. அதுமட்டுமின்றி இவருக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கில் பாலோவர்களும் உள்ளனர்.
நடிகை பாக்கியஸ்ரீ கைவசம் தற்போது விஜய் தேவரகொண்டா படம் ஒன்று உள்ளது. விடி12 எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முதலில் ஸ்ரீலீலா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. பின்னர் அவரைக் கழட்டிவிட்டு பாக்கியஸ்ரீயை கமிட் செய்துள்ளதாம் படக்குழு.
இதுதவிர நடிகர் துல்கர் சல்மான் தெலுங்கில் நடிக்க உள்ள புதிய படத்திலும் அவருக்கு ஜோடியாகப் பாக்கியஸ்ரீ நடிக்கக் கமிட்டாகி உள்ளாராம். இப்படத்தை ரவி என்கிற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். மேலும் நானிக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் பாக்கியஸ்ரீ. அப்படத்தை சுஜித் இயக்க உள்ளார். இப்படி முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்னரே மூன்று மாஸ் நடிகர்களுடன் பாக்கியஸ்ரீ நடிக்கக் கமிட்டாகி உள்ளதால் அவர் தென்னிந்திய திரையுலகில் டாப் ஹீரோயினாக ஒரு ரவுண்டு வருவாரென எதிர்பார்க்கப்படுகிறது.


