தென் கொரியாவில் 181 பேருடன் சென்ற விமானம் ரன்வேயில் விபத்து!

Advertisements

சியோல்:

தென் கொரியாவில் 175 பயணிகள், 6 சிப்பந்திகள் என 181 பேருடன் சென்ற விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் நிற்காமல் அங்கிருந்த சுவற்றில் மோதித் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளானதும் அங்குப் பயங்கர புகை கிளம்பியது. உடனடியாக விமான நிலையத்தில் இருந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தென் கொரியாவில் 175 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஓடுபாதையில் நிற்காமல் சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. விமான விபத்தில் 61 பேர் பலியானதாகச் சொல்லப்படுகிறது.

ரன்வே பக்கவாட்டு சுவரில் மோதியது

தாய்லாந்தின் பாங்காங்கிலிருந்து ஜெரு ஏர் பிளைட் 2216 என்ற விமானம் தென் கொரியாவுக்கு வந்தது. தென் கொரியாவின் ஜியோல்லா மாகாணத்தின் தலைநகரான முவான் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் வருகை தந்துள்ளது. விமானத்தில் 175 பயணிகள், 6 சிப்பந்திகள் என மொத்தம் 181 பயணம் செய்துள்ளனர்.

விமானம் தரையிறங்கும்போது லேண்டிங் கியரில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஓடுபாதையில் நிற்காமல் வேகமாக விமானம் சென்றது. நேராக ரன்வே சுவரில் மோதியது. மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்தப் பயங்கர விபத்தில் விமானத்திலிருந்து கரும்புகைகள் வெளியேறியது.

61 பேர் உயிரிழப்பு

ஏர்போர்ட்டிலேயே விமானம் விபத்துக்குள்ளானதை பார்த்த பயணிகள் பீதியில் அலறினர். விமானம் விபத்தைப் பார்த்ததும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. விமானத்திலிருந்து 2க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். விமான விபத்து தொடர்பாக உடனடியாக விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். உயர் மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சி

தற்போது இந்த விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு பதிவான சிசிடிவி காட்சிகளும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ரன்வேயில் வேகமாகச் சென்று கொண்டிந்த விமானம், திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் வேகமாகச் செல்கிறது. ஓடுபாதையில் நிற்காமல் நேராக அங்கிருந்த சுவரில் வேகமாக மோதுகிறது.

மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. உடனே கரும்புகை குபுகுபுவெனப் பரவும் காட்சிகள் பதிவாகியிருந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன் தான் கஜகஸ்தானில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், 38 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் நடந்த ஓரிரு நாட்களில் மீண்டும் பெரிய அளவிலான விமான விபத்து நடைபெற்றுள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *