Jammu Kashmir Assembly elections: விறுவிறு வாக்குப்பதிவு..!

Advertisements

ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீநகர்:காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்:-

ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 11.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் முதற்கட்ட தேர்தல்

காஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்குப் பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி – பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது.

ஆனால், 2018ம் ஆண்டு கூட்டணியிலிருந்து பாஜக விலகியதையடுத்து ஜம்மு-காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது. பின்னர், 2019ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.

ஜம்மு-காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது.

இதனிடையே ஜம்மு-காஷ்மீரில் 2024 செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டுமெனச் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் 3 கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட தேர்தலில் 24 தொகுதிகளுக்கும் 2ம் கட்ட தேர்தலில் 26 தொகுதிகளுக்கும், 3ம் கட்ட தேர்தலில் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் 24 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. ஜம்முவில் 8 தொகுதிகளுக்கும் காஷ்மீரில் 16 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட தேர்தலில் 23 லட்சத்து 27 ஆயிரத்து 580 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் 11 லட்சத்து 76 ஆயிரத்து 462 பேர் ஆண்கள், 11 லட்சத்து 51 ஆயிரத்து 58 பேர் பெண்கள், 60 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

3 ஆயிரத்து 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காஷ்மீரில் 16 தொகுதிகளுக்கும், ஜம்முவில் 8 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *