
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடக்கு கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர், பொங்கல் விழாவை முன்னிட்டு தன்னுடைய பாச மகளுக்கு தொடந்து 12 ஆண்டுகளாக கரும்பு மற்றும் பொங்கல் சீரை தலையில் சுமந்துகொண்டு சுமார் 17 கிலோமீட்டர் தூரம் கடந்து சைக்கிளிலேயே சென்று அனைவரையும் வியக்க வைத்துள்ளார்..
குறிப்பாக பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுப்பவர்கள் வீட்டிற்கு பெண் வீட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது அவரவர் வசதிக்கேற்ப பொங்கல் சீர் வழங்குவது தமிழர்களின் வாடிக்கையாக உள்ளது.தன் மகள் மீது கொண்ட பாசத்தால் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் சீர் வழங்கி வருகிறார் இந்த பெரியவர்..
குறிப்பாக இவர் 82 வயதிலையும் அவரது சைக்கிளில் விவேகானந்தர் காலண்டர் தேங்காய் பழம் மஞ்சள் கொத்து வேட்டி துண்டு பொங்கல் பூ பச்சரிசி வெள்ளம் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொங்கல் சீரை வைத்துக்கொண்டு ஐந்து கரும்புகளை தலையில் சுமந்து கொண்டு கரும்பை கையில் வைத்து பிடிக்காமல் அவரது சைக்கிளை ஓட்டி சென்று வருகிறார்.
காலங்கள் கடந்தும் தமிழனின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் யாராலும் மாற்ற முடியாது என்பதற்கு சான்றளிக்கும் விதத்திலும் தமிழர்கள் என்றாலே பாசத்துக்கு பெயர் பெற்றவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையிலும் தனது மகளுக்கு பாரம்பரியமாக சைக்கிளையே சென்று பொங்கல் சீர் வழங்கி வரும் தந்தைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.




