சிபிஐ கேள்விகளுக்கு தப்பு தப்பாக பதில் சொன்ன விஜய்.!

Advertisements

25 கேள்வி பதில் விவரம்தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய் சிபிஐ விசாரணைக்காக டெல்லிக்கு அழைக்கப்பட்டார் அங்கு சிபிஐ அதிகாரிகள் அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினார்கள் இதில் அவரிடம் 25 விதமான கேள்விகள் கேட்கப்பட்டன இதில் பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் தவறாக பதில் சொல்லி இருக்கிறார்.

விஜய் பேச்சு அனைத்துமே பதிவு செய்யப்பட்ட நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக அவர் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்வார் என தெரிய வந்திருக்கிறது. விஜய்யிடம் சிபிஐ கேட்ட கேள்விகள் என்ன? அவர் சொன்ன பதில்கள் என்ன? டெல்லியில் என்ன நடந்தது? என்பது குறித்து 100% முழுமையான தகவல்கள் ஜெம் தொலைக்காட்சிக்கு கிடைத்திருக்கிறது.

தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்த காத்திருக்கும் டெல்லி சிபிஐ விசாரணை குறித்து ஜெம் தொலைக்காட்சி வழங்கும் சிறப்பு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம். கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்பொழுது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் எதிர்பாராத விதமாக 41 பேர் உயிரிழந்தனர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. முன்னதாக நடைபெற்ற சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டெல்லி சிபிஐ காவல்துறையினர் ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய தலைவர்களாக புசியானந்த் , ஆதவ் அர்ஜுனா நிர்மல் குமார் மற்றும் விஜயின் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் என பலரிடம் விசாரணை நடத்திய நிலையில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது .

அதன் பேரில் அவர் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராவதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கிளம்பிச் சென்றார். அந்த விமானம் சுமார் 13 பேர் பயணம் செய்யக்கூடிய விமானம் ஆகும். இதன் வாடகை ஒரு மணி நேரத்திற்கு இரண்டரை லட்சம் ரூபாயாகும் அந்த வகையில் விஜய் டெல்லி செல்வதற்காக 50 லட்சம் ரூபாய் விமான செலவு செய்யப்பட்டிருக்கிறது.

அந்த விமானத்தில் விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா நிர்மல் குமார் ஆகியோர் உடன் சென்றனர். டெல்லி சென்றதும் காலை பத்து முப்பது மணி அளவில் சிபிஐ அலுவலகத்தை அடைந்த அவர்கள் விசாரணைக்கு தயாராகினார்கள். முதல் கட்டமாக நடிகர் விஜய் கையில் ஒரு பை வைத்திருந்தார். அந்த பை சோதனையிடப்பட்டது , அந்தப் பையில் என்னென்ன கேள்விகள் கேட்பார்கள் அதற்கு என்ன மாதிரி பதில் சொல்ல வேண்டும் என ஒரு அலுவலக கோப்பு இருந்தது .

இது தவிர சில பிஸ்கட் பாக்கெட்டுகள் இருந்தன அந்த கோப்புகளை சிபிஐ அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர். இதனை அடுத்து சிபிஐ அலுவலகத்துக்கு உள்ளே நுழைந்த விஜய் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர் . ஆதவ் அர்ஜுனா வரவேற்பு அறையில் அமர வைக்கப்பட்டார்.

விஜய் இடமும் தனிப்பட்ட முறையில் தான் விசாரணை நடைபெற்றது விசாரணை நடைபெறும் சமயத்தில் நிர்மல் குமாரும் தனி அழைக்கு அனுப்பப்பட்டார். சிபிஐ அதிகாரிகள் முன்னால் அமர்ந்த விஜய் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தொடங்கினார். அவர் என்ன பதில் சொன்னாரோ அவை அனைத்தும் அங்கிருந்த பெண் ஒருவரால் டைப் செய்யப்பட்டது.

பல கேள்விகளுக்கு விஜய் ஆங்கிலத்திலும் தமிழிலும் பதில் சொன்னார். இந்த விசாரணையின் போது விஜய் எதிர்பாராத வகையில் நேர்முகத் தேர்வு போல் ஏராளமான கேள்விகளை அடுக்கடுக்காக சிபிஐ அதிகாரிகள் கேட்க ஆரம்பித்தார்கள். நடிகர் விஜய்யிடம் கரூர் கூட்டத்திற்கு எந்த தேதியில் நீங்கள் அனுமதி கேட்டீர்கள் . அந்த கூட்டத்துக்கு எத்தனை மணிக்கு நீங்கள் சென்றீர்கள்.  உங்களை காவல்துறையினர் எத்தனை மணிக்கு வர சொன்னார்கள்.

நீங்கள் கூட்டத்தில் எவ்வளவு நேரம் பேசினீர்கள் நீங்கள் பேசும்பொழுது செருப்பு கல் ஆகியவை வீசப்பட்டன. அது உங்களுக்கு தெரியுமா? கூட்டத்தில் நீங்கள் கலந்து கொண்ட போது இறந்தவர்கள் பற்றிய தகவல் உங்களுக்கு எப்போது தெரிந்தது. உடனடியாக ஏன் இறந்தவர்கள் குடும்பத்தினரை நீங்கள் பார்க்கவில்லை.

கரூரில் இருந்து புறப்பட்ட நீங்கள் ஒரு மணி நேரம் எங்கேயோ தாமசம் செய்திருக்கிறீர்கள் . அப்பொழுது எங்கு இருந்தீர்கள் யார் யாரிடம் நீங்கள் போனில் பேசினீர்கள். உங்கள் தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஹெட்லைட்டை அடிக்கடி ஆன் செய்திருக்கிறார்கள் . ஆப் இருக்கிறார்கள் எதற்காக இப்படி செய்தார்கள்.

கரூர் கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு எந்த அளவில் இருந்தது என ஏராளமான கேள்விகளை வரிசையாக நடிகர் விஜய்யிடம் கேட்டுள்ளனர். அவர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் விஜய் ஒவ்வொன்றாக பதில் அளித்தார். விஜய் பதிலளிக்கும் பொழுது நான் , திருச்சி கூட்டத்தை முடித்துவிட்டு பெரம்பலூருக்கு கிளம்பினேன்.  அப்பொழுது அங்கு நெரிசில் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது . எனவே அங்கு போக வேண்டாம் என காவல்துறையினர்கள் சொன்னார்கள்.

நானும் போகவில்லை. ஆனால் கரூரில் இந்த அளவுக்கு கூட்டம் கூடும் என்பதை காவல்துறையினர் எனக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை . அப்படி தகவல் தெரிவித்து இருந்தால் நான் போயிருக்க மாட்டேன் எனபதில் தெரிவித்தார்.இதனிடையே நடிகர் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் குறிப்பிட்டு பேசினார்கள்.  அப்பொழுது சம்பவ இடத்திற்கு இடத்திற்கு நீங்கள் போக வேண்டாம் என காவல்துறையினர் ஆதவ் அர்ஜுனாவிடம் தகவல் தெரிவித்து இருக்கின்றனர்  .

ஆனால் ஆதவ் அர்ஜுனா தான் உங்கள் வாகன ஓட்டியிடம் நீ குறிப்பிட்ட இடத்திற்கு செல் என உத்தரவிட்டிருக்கிறார். இது பற்றி உங்களுக்கு தெரியுமா என கேட்டுள்ளனர் . ஆனால் விஜய் எனக்கு தெரியாது என பதில் சொல்லியுள்ளார். இது மட்டுமல்லாமல் ஏராளமான வீடியோ காட்சிகளை காட்டியும் நடிகர் விஜய்யிடம் கேள்விகள் கேட்டுள்ளனர். அப்பொழுது விஜய் முன்னுக்கு பின் முரணாக சில தகவல்களை தெரிவித்து இருக்கிறார்.

விஜய்யை பொருத்தவரையில் மிக நிதானமாகவே விசாரணையில் கலந்து கொண்டிருக்கிறார். கரூர் சம்பவத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் பற்றி குறிப்பிடும் பொழுது நடிகர் விஜய் சற்று கண் கண் கலங்கியபடி அழுதும் இருக்கிறார். அப்பொழுது சிபிஐ அதிகாரிகள் அவரிடம் கேள்விகள் கேட்பதை குறைத்துக் கொண்டு ஆறுதல் கூறியுள்ளனர்.

இந்த விசாரணையின் போது நடிகர் விஜய்க்காண மதிய உணவை அதிகாரிகள் ஆர்டர் செய்தனர் . ஆனால் விஜய் எனக்கு சாப்பிட மனமில்லை என கூறிக்கொண்டு தான் கொண்டு வந்த பிஸ்கட் பாக்கெட்டுகளில் இருந்து சில பிஸ்கட்டுகளை எடுத்து சாப்பிட்டு தண்ணீர் அருந்திய படி மேலும் விசாரணைக்கு தயாராகி இருக்கிறார்.

நடிகர் விஜய் தெரிவித்த பதில்களில் ஏற்கனவே புஸ்ஸி ஆனந்த் ,  அர்ஜுனா , நிர்மல் குமார் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களோடு ஒப்பிடும்பொழுது சில முரண்பாடுகள் ஏற்பட்டு இருக்கின்றன. இதேபோல் காற்றடைவு தெரிவித்த தகவல்களிலும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இது தொடர்பாக சிபிஐ விசாரணை மேலும் முடுக்கி விடப்பட்டிருக்கிறது. இந்த விசாரணையின் போது சிபிஐ அதிகாரிகளே நடிகர் விஜய் இடம் நீங்கள் மிகவும் எளிமையாக இருக்கிறீர்கள்.  இவ்வளவு எளிமையாக இருப்பீர்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர் .

மேலும் எங்கள் வீட்டில் உள்ள குடும்பத்தார் எல்லோரும் உங்களுடைய ரசிகர்கள் என்றும் அவரிடம் தெரிவித்த நிலையில் விஜய் உடன் சில சிபிஐ அதிகாரிகள் செல்பி படமும் எடுத்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து நீங்கள் மீண்டும் விசாரணைக்கு வர வேண்டியது இருக்கும் என விஜய் இடம் கூறி இருக்கிறார்கள்.

இதனிடையே நடிகர் விஜய் மீண்டும் சிபிஐ விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்ற தகவலை அவரது கட்சியின் மூத்த நிர்வாகியான நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கும் பொழுது தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயிடம் டெல்லி சிபிஐ போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

தற்பொழுது பொங்கல் பண்டிகை காரணமாக விசாரணை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. எனவே பொங்கல் பண்டிகைக்கு பிறகு மீண்டும் விஜயிடம் விசாரணை நடத்த வேண்டும் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . ஆனால் எந்த தேதி என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை என கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நடிகர் விஜய் வாக்குமூலம் புசி ஆனந்து வாக்குமூலம் ஆதவ் வர்ஜுனா வாக்குமூலம் விஜயகாந்த் டிரைவர் வாக்குமூலம் நிர்மல் குமார் வாக்குமூலம் ஆகிய அனைத்திலும் ஏராளமான குளறுபடிகள் இருக்கின்றன. ஒருவருக்கொருவர் முன்னுக்கு பின்னும் முரணாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இது அனைத்தும் ஒப்பிட்டு நடிகர் விஜய் இடம் உச்சகட்ட விசாரணை நடைபெற இருக்கிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் சிபிஐ வலையில் நடிகர் விஜய் சிக்கிக் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.  இது குறித்து எதிர்க்கட்சியினர் பேசும்பொழுது , சிபிஐ விசாரணை வேண்டுமென விஜய் தான் வேண்டுகோள் விடுத்தார். இப்பொழுது சி.பிஐ விசாரணையில் அவரே சிக்கிகொண்டார் என்று விமர்சனஙகள் செய்து வருகின்றனர்.

நடிகர் விஜய் மீதான சில குற்றச்சாட்டுகள் சிபிஐஆல் நிரூபிக்கபடுமானால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு எந்த நேரமும் கைது செய்யப்படலாம் . இதன் மூலம் தமிழக அரசியலில் மிகப்பெரிய போர்க்களம் ஏற்படலாம் என்ற சூழ்நிலை இருக்கிறது.நடிகர் விஜய்யை பொருத்தவரையில் எப்பொழுது தமிழக வெற்றி கழகத்தை தொடங்கினாரோ அதிலிருந்து ஏராளமான சோதனைகளை சந்தித்து வருகிறார்.

அவரது ஜனநாயகன் படமும் வெளியிடுவதில் ஏராளமான சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. அவர் தனிப்பட்ட அரசியல் நடத்துவதை விடவும் தங்களது கூட்டணியில் சேர்ந்துக் கொண்டால் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என பாரதிய ஜனதா கட்சி கணக்கு போடுவதாக சொல்கிறார்கள்.

ஆனால் இது குறித்து நடிகர் விஜயின் வலதுகரமாக செயல்பட்டு வரும் நிர்மல் குமார் எந்த சூழ்நிலையிலும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என தெரிவித்திருக்கிறார். எனவே இத்தகைய மிகப்பெரிய போராட்ட களத்தில் இருந்து நடிகர் விஜய் ஜெயிப்பாரா? அவரது அரசியல் கிளைமேக்ஸ் காட்சி எப்படி முடிய போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *