
தொழில்கள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியையும் பாதிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர்.
ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இதனால் வாகன உதிரிபாகங்கள், ஜவுளி மற்றும் மருத்துவம் போன்றத் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது.
மேலும் இந்தியாவின் தொழில்கள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியையும் பாதிக்கும்.
பின்னர் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியப் பொருட்களுக்குப் பதிலாக, வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்ய உள்ளனர்.
இது இந்தியாவிற்கு நீண்டகால பொருளாதாரச் சவாலாக மாறும் என தெரியவருகின்றது.

