6 சட்டமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த நவீன் பட்நாயக்..!

Advertisements

மாநிலங்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்த பிஜு ஜனதாதளத்தைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் இடைநீக்கம் செய்துள்ளார்.

ஒடிசாவில் அண்மையில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில், எதிர்க்கட்சியான பிஜு ஜனதாதளத்தைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கட்சித் தலைமையினர் நோட்டீஸ் அனுப்பினர்.

இதில், அவர்களது விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று சட்டசபை கொறடா தெரிவித்திருந்தார். இதையடுத்து, கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் தலைமையில் கட்சியின் அரசியல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதை;த தொடர்ந்து, மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த 6 சட்டமன்ற உறுப்பினர்களையும் நவீன் பட்நாயக் இடைநீக்கம் செய்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *