
நாம் தினமும் உண்ணும் உணவுகள் நமது ஆரோக்கியத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சில உணவுகள் நம்மை ஊட்டமளித்து பலப்படுத்தினாலும், மற்றவை காலப்போக்கில் அமைதியாக நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.
நாம் தினமும் உண்ணும் உணவுகள் நமது ஆரோக்கியத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சில உணவுகள் நம்மை ஊட்டமளித்து பலப்படுத்தினாலும், மற்றவை காலப்போக்கில் அமைதியாக நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.
மோசமான உணவுத் தேர்வுகள், நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரித்து, முக்கிய உடல் செயல்பாடுகளைச் சீர்குலைத்து, சில சமயங்களில் நமது ஆயுட்காலத்தை கூடக் குறைக்கலாம்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்:
- உறைய வைக்கப்பட்ட சிக்கன் அல்லது தொத்திறைச்சி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் சமைப்பதற்கு எளிமையானதாகவும் சுவையாகவும் கருதப்படுகின்றன. ஆனால் அவை பெரும் உடல்நல அபாயங்களுடன் வருகின்றன. இந்த இறைச்சிகள் நைட்ரைட்டுகளுடன் பாதுகாக்கப்படுவதால், அவை புற்றுநோய்க்கான குறிப்பாகப் பெருங்குடல் புற்றுநோய்க்கான அதிக ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
- 2010-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வது இறப்பு விகிதம், புற்றுநோய் ஆபத்து மற்றும் இதய நோய்களின் ஆபத்து ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று தெளிவாகக் கூறுகிறது. இந்த இறைச்சிகளில் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சோடியம் அதிகமாக உள்ளது. இது இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கு பங்களிக்கிறது.
சர்க்கரை பானங்கள்:
குளிர்பானங்கள், ஆற்றல் பானங்கள் மற்றும் பிற சர்க்கரை பானங்களில் அதிகமாகச் சர்க்கரைகள் சேர்க்கப்படுகின்றன. அவை நம் உடலுக்குப் பிரச்சனையை மட்டுமே உருவாக்குகின்றன.
அதிகப்படியான சர்க்கரை நுகர்வு எடை அதிகரிப்பு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் டைப் 2 நீரிழிவு, இதய நோய் மற்றும் கல்லீரல் பிரச்சனைகளை அதிகரிக்கும் அபாயத்திற்கு வழிவகுக்கிறது.
2021-ல் வெளியிடப்பட்ட ஆய்வில், இருதய நோய்கள், நீரிழிவு மற்றும் உடல் பருமன் தொடர்பான நோய்களுக்கான பங்களிப்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 184,000 இறப்புகளுக்கு சர்க்கரை பானங்கள் காரணமாகின்றன.
இதற்குப் பதிலாக, உங்கள் உடலை நீரேற்றமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கத் தண்ணீர், மூலிகை தேநீர் அல்லது சர்க்கரை சேர்க்கப்படாத பானங்களைத் தேர்வு செய்யவும்.
சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்:
வெள்ளை பிரெட், வெள்ளை அரிசி மற்றும் பாஸ்தா போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் பல வீடுகளில் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், அவை மிகவும் பதப்படுத்தப்பட்டுள்ளதால், அதிலுள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அகற்றப்படுகின்றன.
இந்த ஊட்டச்சத்துக் குறைபாடு விரைவான ரத்த சர்க்கரை அதிகரிப்பு மற்றும் குறைப்பை ஏற்படுத்துகிறது. காலப்போக்கில் டைப் 2 நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
வறுத்த உணவுகள்:
- பிரஞ்சு ஃப்ரைஸ், வறுத்த கோழி ஆகியவை சுவையாக இருக்கலாம். ஆனால் அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் உணவுகள் ஆகும். வறுத்த உணவுகள் பெரும்பாலும் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகம் உள்ள எண்ணெய்களில் சமைக்கப்படுகின்றன. அவை கெட்ட கொழுப்பின் (எல்டிஎல்) அளவை உயர்த்தும் மற்றும் நல்ல கொழுப்பை (எச்டிஎல்) குறைக்கும் என்று அறியப்படுகிறது. இது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
- வறுத்த உணவுகளை வழக்கமாக உட்கொள்வது, குறிப்பாகப் பெண்களில், ஆரம்பகால மரணமடையும் ஆபத்துடன் தொடர்புடையது என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. வறுத்த உணவுகள் கலோரிகள் மற்றும் எடை அதிகரிப்பு மற்றும் நாள்பட்ட அழற்சிக்கு வழிவகுக்கும்.
பாக்கெட் தின்பண்டங்கள்:
சிப்ஸ் மற்றும் பிற பாக்கெட் தின்பண்டங்கள் மிகவும் பதப்படுத்தப்பட்டு ஆரோக்கியமற்ற சேர்க்கைகள், ரசாயனங்கள் மற்றும் உப்பு சேர்க்கப்படுகின்றன. அதிக சோடியம் உட்கொள்வது உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் பக்கவாதம் அதிகரிக்கும் அபாயத்திற்கு வழிவகுக்கும். இந்தத் தின்பண்டங்களைச் சாப்பிடுதற்கு பதிலாக, நட்ஸ், விதைகள் அல்லது பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுங்கள்.
செயற்கை இனிப்பூட்டிகள்:
செயற்கை இனிப்பூட்டிகள் சர்க்கரைக்கு “ஆரோக்கியமான” மாற்றாக விளம்பரம் செய்யப்பட்டாலும், சாக்கரின் போன்ற செயற்கை இனிப்பூட்டிகள் இயல்பாகவே அபாயங்களைக் கொண்டிருக்கலாம். இந்த இனிப்புகள் குடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்து, வளர்சிதை மாற்ற ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும் மற்றும் சர்க்கரை உணவுகளுக்கான அதிக ஆசையைத் தூண்ட வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது.
