
வேளச்சேரியில் பிரபல ரெஸ்டாரண்டில் உணவு அருந்திய 30க்கு மேற்பட்டோர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருக்கிறது.
சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள கோல் பாபிக்கு(coal barbecue) எனும் பிரபல ரெஸ்டாரன்ட் செயல்பட்டு வருகிறது.இந்த உணவகத்தில் பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த 60கும் மேற்பட்டோர் திருமண நிகழ்ச்சி சம்பந்தமாக டேபிள் ஆர்டர் செய்து உணவு சாப்பிட வந்துள்ளனர்.
உணவகத்தில் பல்வேறு அசைவு உணவு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. உணவு அருந்தியவர்கள் சில மணி நேரத்தில் அடுத்தடுத்து வாந்தி எடுத்துள்ளனர். சுயநினைவு இன்றி சிலர் மயங்கி விழுந்துள்ளனர். இதனால் உணவகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உணவு சாப்பிட்ட 30க்கும் மேற்பட்டவருக்கு அடுத்தடுத்து வாந்தி மயக்கம் அடைந்ததால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வேளச்சேரி போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் இடத்திற்கு வந்த வேளச்சேரி போலீசார் உணவக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சுந்தர்ராஜன் தலைமையில் உணவகத்தை சோதனை மேற்கொண்டார் உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளார்.

