20ஆயிரம் பேருக்குப் பரிமாறப்பட்ட அறுசுவை உணவு!

Advertisements

Singampunari | Sivaganga District | Aadi Perukku | Siddhar Muthu Vaduganathan Temple

ஆடிப்பெருக்கை முன்னிட்டு முத்துவடுகநாதர் கோயிலில் 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு முத்து வடுகநாதர் கோயிலில் 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தர் முத்து வடுகநாதர் கோயிலில், நேற்று ஆடிப் பெருக்கை முன்னிட்டு வணிகர் நலச்சங்கம் சார்பாக 37வது ஆண்டு அன்னதான விழா நடைபெற்றது. இதையொட்டி காலைச் சித்தருக்குப் பால், பன்னீர், விபூதி, சந்தனம் வாசனை திரவியங்கள் பழச்சாறுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

வண்ணமலர் அலங்காரத்தில் சித்தர் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். தொடர்ந்து கோயில் முன்பு போடப்பட்டிருந்த மெகா பந்தலில் அன்னதானத்திற்காகச் சோறு மலைபோல் குவிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. காலை 10.30 மணிக்குத் தொடங்கிய அன்னதானம் மாலைவரை நடைபெற்றது.

Singampunari | Sivaganga District | Aadi Perukku | Siddhar Muthu Vaduganathan Temple

இதில் சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *