ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இன்று மோதல்

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகம் அணியுடன் இன்று விளையாட உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இருபது ஓவர் போட்டி தொடங்கியது.  இப்போட்டியின் இன்று துபாயில் நடக்கும் இரண்டாவது லீக்கில் எட்டு முறை சாம்பியனான இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இதில் விளையாட உள்ளது.   துணை கேப்டன் சுப்மன் கில் , அபிஷேக் ஷர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க உள்ளனர்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இரு போட்டிகளை தவற விட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 20 ஓவர் அணிக்கு திரும்பியிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக அணி முகமது வாசீம் தலைமையில் களம் காணுகிறது. இந்திய நேரப்படி இரவு எட்டு மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *