Bangladesh : ஜவுளி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 16-தொழிலாளர்கள் பலி.!

வங்காளதேச தலைநகர் டாக்காவில், ரூப்நகர் பகுதியில், வங்காளதேச வர்த்தக பல்கலைக்கழகத்திற்கு, எதிரேயுள்ள  ரசாயன கிடங்கும், அதன் அருகே 4 மாடிகள் கொண்ட ஜவுளி ஆலையும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், நேற்று உள்ளூர் நேரப்படி, காலை 11 மணியளவில், ரசாயன கிடங்கில் ரசாயன பொருட்கள் வெடித்ததில், தீவிபத்து ஏற்பட்டது.

இதனால், அருகில் உள்ள ஜவுளி ஆலைக்கும் தீ பரவி, 4 மாடிகளிலும் தீப்பற்றி எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்து, 12 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  அதன்பிறகு ஜவுளி ஆலையில் சோதனை நடத்தியபோது, தீயில் கருகிய 16 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

அவர்கள் அனைவரும் ஜவுளி ஆலை தொழிலாளர்கள் என தெரியவந்தது. ரசாயன கிடங்கிலிருந்து, உருவான விஷ வாயுவை சுவாசித்ததால், அவர்கள் உயிரிழந்ததாக தீயணைப்புத்துறை அதிகாரி முகமது தஜுல்-இஸ்லாம்-சவுத்ரி தெரிவித்தார். ரசாயன கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்திற்கான காரணம், விசாரணைக்கு பிறகு தெரிய வரும் என்றும் தெரிவித்தார்.

மேலும் சில தொழிலாளர்கள் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகி;ச்சை பெற்று வருகின்றனர். வங்காளதேச தலைமை ஆலோசகர் முகமது-யூனுஸ் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *