
தங்களுடன் அணு ஆயுத உடன்படிக்கைக்கு வர மறுத்தால், ஈரான் மீது வரலாறு காணாடஹ் அளவுக்கு குண்டுகளை வீசுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.ஆனால் அப்படியான தாக்குதல் நடந்தால் மேற்காசியாவில் அமெரிக்காவுக்கு என இருக்கும் கட்டமைப்புகள் அனைத்தும் அடித்து நொருக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.ஈரான் மீது அமெரிக்கா ஏற்கெனவே பல்வேறு தடைகளை விதித்து வந்திருக்கிறது. இந்த தடைகள் காரணமாக அந்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அனால் ஈரானும் தொடர்ந்து அமெரிக்காவிற்கு எதிராக போராடி வருகிறது
ஈரான் பிரிக்ஸ் உடன் சேர்ந்து வளர தொடங்கியுள்ளது. தற்போது ஈரான் கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது. அதே நேரம் சொந்த தேவைக்காக யுரேனியத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளது. அணு உலைகளில் மின்சார தயாரிப்புக்காக யுரேனியம் பயன்படுத்தப்படும். 2015 அணு ஒப்பந்தத்தின்படி ஈரான் 3.67% வரை மட்டுமே யுரேனியத்தை செறியூட்டிக்கொள்ள அனுமதித்தது. 90% செறிவூட்டம் செய்யப்பட்டால் அந்த யூரேனியத்தை அணு குண்டு தயாரிக்க பயன்படுத்த முடியும். எனவேதான் அமெரிக்கா எச்சரிக்கை செய்து வருகிறது. ஆனால் இப்போது வரை ஈரானின் யூரேனியம் செறிவூட்டல் 60%-ஐ தாண்டவில்லை. தங்கள் நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே 60% செறிவூட்டலை செய்து வருகிறோம் என்று ஈரான் கூறியுள்ளது. இதனை ஏற்காத டிரம்ப், உடனடியான அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைந்து செறிவூட்டலை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இதனை ஈரான் செய்யவில்லை எனில், அந்நாட்டின் மீது வரலாறு காணாத அளவுக்கு குண்டுகளை வீசுவதாகவும் எச்சரித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஈரானின் உச்ச தலைவர், அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது குண்டுகளை வீசினால் மேற்கு ஆசியாவில் அமெரிக்காவுக்கு என சொல்லிக்கொள்ள ராணுவ தளமோ, சொந்த கட்டமைப்புகளோ எதுவும் இருக்காது என்று எச்சரித்தள்ளது.



