V. Senthil Balaji: ஜாமீன் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

Advertisements

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மேல்முறையீட்டு மனுமீதான வழக்கு விசாரணையை 28 ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கி தருவாகக் கூறி பணம் பெற்றதாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது பலரும் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி பலமுறை ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் முறையிட்டும் அவருக்குக் கிடைக்கவில்லை. அதனால் அவர் சிறையில் தான் இருந்து வந்தார். இதனிடையே அவ்வப்போது உடல்நிலை பாதிப்பால் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அந்த வகையில் நவம்பர் 15 ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. முதலில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்குச் செந்தில் பாலாஜிக்கு வயிறு, குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாகச் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவைக் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்துச் செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம்திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி விசாரித்தது. அப்போது செந்தில்பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை தரப்பு விசாரணை தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுத்தது. தொடர்ந்து வழக்கு விசாரணை நவம்பர் 20 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் மேல்முறையீட்டு மனுமீதான வழக்கு விசாரணை இன்று நீதிபதிகள் பேலே எம்திரிவேதி, சதீஷ் சந்திரா சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததது.அப்போது செந்தில் பாலாஜி ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள்வழக்கு விசாரணையை 28 ம் தேதிக்கு ஒத்திவைத்து  உத்தரவிட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *