2 நாட்களில் தங்கம் விலை குறைந்தது!

Advertisements

சென்னை:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து கடந்த 11-ந்தேதி சவரன் 58 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. 12-ந்தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லாததால் ஒரு கிராம் தங்கம் ரூ.7,285-க்கும் ஒரு சவரன் ரூ.58,280-க்கும் விற்பனையானது.

திடீரென நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,230-க்கும், ஒரு சவரன் ரூ.57,840-க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.101-க்கு விற்பனையானது.

இந்நிலையில் தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது. இதனால் தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.57 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.7,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *