அண்ணா பல்கலை. பாலியல் விவகாரம்: ஞானசேகரன் வீட்டில் எஸ்.ஐ.டி சோதனை!

Advertisements

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை தவிர்தது மற்றொரு நபரும் ஈடுபட்டிருக்கலாமெனச் சந்தேகப்படப்படுகிறது. மாணவியை மிரட்டும்போது போனில் ‘சார்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த ‘சார்’ யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பாதிக்கப்பட்ட மாணவியும் எஸ்.ஐ.டி-யிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த எஸ்.ஐ.டி விசாரணைக் குழு அதிகாரிகள் இன்று காலை ஞானசேகரன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் ஞானசேகரன் பயன்படுத்தி வந்த லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஞானசேகரன் இது போன்ற பல சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுப்படுகிறது. இதனால் லேப்டாப்பை ஆய்வு செய்தால் அவர் எடுத்த வீடியோக்களை அதில் சேமித்து வைத்துள்ளாரா? என்பது குறித்து தெரிய வரும் என் தகவல்

ஞானசேகரன் மீது கொள்ளை தொடர்பான வழக்குகள் உள்ளது. தொடர்பாக அவருடைய இரண்டு மனைவிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையடித்த பணத்தில் நகைகள், சொத்துகள் வாங்கினாரா? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *