லைசென்ஸ் இல்லாமல் பார் நடத்தினால் கடும் நடவடிக்கை:அமைச்சர் முத்துசாமி பேட்டி.

Advertisements

ஒருவர் மதுவை பகிர்ந்து குடிப்பதற்காக அரை மணிநேரம் டாஸ்மாக் கடை வாசலில் காத்திருப்பது தெரியவந்துள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். பிற மாநிலங்களில் விற்பனை செய்வது போல 90 மில்லி லிட்டர் டெட்ரா பாக்கெட்டில் விற்பனை செய்ய ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துச்சாமி, டாஸ்மாக் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடைகளில் எந்த தவறும் நடக்கக்கூடாது என்று நடவடிக்கை எடுத்து வருகிறோம். சில கடைகளில் புகார்கள் வருகின்றன.

Advertisements

அது பெரிதுபடுத்தப்பட்டு விட்டது. லைசென்ஸ் உள்ளவர்கள் மட்டுமே பார்நடத்த முடியும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சில கடைகளில் லைசென்ஸ் இல்லாமல் பார் நடத்தினால் தடுக்க நடவடிக்கை. தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளோம் அந்த கடைகளில் இருந்து வேறு கடைகளுக்கு போய் வாங்கப்பார்க்கிறார்களா? அல்லது குடிப்பதையே விட்டு விட்டார்களா என்று கண்காணிக்கின்றோம். குடிப்பதை மக்கள் விட்டு விட்டால் அதை விட மகிழ்ச்சி ஏதுமில்லை அதை விட்டு விட்டு வேறு ஏதேனும் தவறான பாதைகளில் சென்று விடக்கூடாது என்றும் அமைச்சர் முத்துச்சாமி கூறினார்.

டாஸ்மாக்கில் வருமானம் ஏன் குறைகிறது என்று ஆலோசனை நடத்தப்பட்டது. மக்கள் குடிப்பதை நிறுத்தி விட்டார்களா? அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்தினால் டாஸ்மாக் விற்பனை குறைகிறதா என்றும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல என்றும் அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்தார். டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்காக டார்கெட் நிர்ணயம் செய்யப்படுவது வருமானத்தை அதிகரிப்பதற்காக மட்டுமல்ல. விற்பனை ஏன் குறைகிறது அந்த பணம் வேறு எங்கே செல்கிறது என்பதை கண்டறிவதற்காகவும்தான்.

பாட்டில்களில் மது விற்பனை செய்வது பிரச்சினையாக உள்ளது. நீர்வழித்தடங்களில் போடுகின்றனர். சாலைகளில் போட்டு உடைக்கின்றனர். எனவே டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். டேமேஜ் ஆவது தவிர்க்கப்படும். டேமேஜ் ஆக வாய்ப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. 180 மில்லி மது பாட்டிலில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. அதை ஒருவரே குடிக்க முடியாது. வேறு ஒருவருக்காக அரை மணி நேரம் கடை வாசலில் காத்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. பக்கத்து மாநிலத்தில் விற்பனை செய்வது போல 90 மில்லி பாக்கெட் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கலாம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதே போல கடைகளை சுத்தமாக சுகாதாரமாக வைக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. கால நேரத்தை பார்த்தை தற்போது பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் பார் உள்ளது. காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரைக்கும் கடைகளை திறந்து வைத்திருக்கிறார்கள். இதுதான் தற்போது நடைமுறையில் உள்ளது. காலை 7 மணி முதல் 9 மணி வரை வேலைக்கு செல்பவர்கள் கட்டிட வேலை, கடுமையான வேலைக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதற்கு என்ன ஏற்பாடு செய்யப்போகிறீர்கள் என்று கேட்கின்றனர். என்ன செய்வது என்று ஆலோசித்து உள்ளோம் ஆனால் முடிவு செய்யவில்லை. மது தேவை என்பவர்கள் இரவே வாங்கி வைத்து விடலாமே என்று கேட்டதற்கு அதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது பயன்படுத்தி விடுவோம் என்று தெரிவித்தனர். குழந்தைகள் இருக்கிறார் எனவே வீட்டில் மதுவை வாங்கி வைக்க முடியாது என்று கூறியுள்ளனர். அவர்கள் கோரிக்கை நியாமானதாகவே இருக்கிறது. குடிப்பதற்காக வேறு வழியை தேர்வு செய்து விடக்கூடாது என்றும் நாங்கள் ஆலோசித்து இருக்கிறோம் என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *