
மோடியா லேடியா என ஜெயலலிதா கேட்ட பொழுது மோடி ஓடிவிட்டதாகவும், இப்போது பாஜகவுடன் எடப்பாடி பழனிச்சாமி கைகோத்திருப்பது வேதனையாக உள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவில் அப்போதைய ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் ஆதிக்கச் சாதியினரால் வெட்டிக் கொல்லப்பட்டதன் 28ஆம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது. அவர்களின் நினைவிடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் பேசிய திருமாவளவன், ஜெயலலிதா காலத்தில் மோடியா லேடியா என்கிற போட்டியில் ஜெயலலிதாவைப் பார்த்து மோடி ஓடி விட்டதாகத் தெரிவித்தார். இப்போது எடப்பாடி பழனிச்சாமி பாரதிய ஜனதாவுடன் கைகோத்துள்ளது வேதனையாக உள்ளதாகத் தெரிவித்தார்.


