தென்கொரியாவில் காட்டுத்தீ – 4 பேர் உயிரிழப்பு!

Advertisements

தென் கொரியாவின் சான்சியோங் மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் நேற்று முன் தினம் (மார்ச் 21) மாலை 3 மணியளவில் காட்டுத் தீ பற்றியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் காட்டுத் தீயை அணைக்க போராடி வரும் நிலையில் நேற்று (மார்ச் 22) மாலை 65 சதவிகித தீ அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சுமார் 290 ஹெக்டேராக விரிவடைந்துள்ள நிலையில் அப்பகுதியைச் சுற்றியுள்ள 8 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மூன்று வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தென்கொரிய வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த தீயை அணைக்க ஏராளமான வாகனங்களையும், நூற்றுக்கணக்கான அதிகாரிகளை குவித்துள்ளதாக வனத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 

இதனிடையே தென்கிழக்கு நகரமான கியோங்சாங் மாகாணத்தில் சுமார் 620 பேர் நேற்று காட்டுத் தீயில் இருந்து தப்பித்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாக உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தேவையான அனைத்து உபகரணங்களையும் பயன்படுத்தி காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டு மீட்புப் படைகளுக்கு தென் கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சங்-மோக் உத்தரவிட்டுள்ளார். இந்தக் காட்டுத் தீயை முழுவதுமாக அணைத்த பின்னர் அது உண்டானதற்கான காரணம் குறித்த விசாரணையை துவங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *