கேரளத்தில் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்..!

Advertisements

பிரிட்டன் கடற்படைக்குச் சொந்தமான போர்விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்து கோளாறைச் சரிசெய்த பின் மீண்டும் புறப்பட்டுச் சென்றுள்ளது.

பிரிட்டன் கடற்படைக்குச் சொந்தமான போர் விமானம் ஜூன் 14ஆம் இந்தியப் பெருங்கடலுக்கு மேலே பறந்தபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கேரளத்தின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

அதன்பிறகு மூன்று வாரங்களாக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. பிரிட்டனில் இருந்து வந்த விமானப் பொறியியல் வல்லுநர்கள் திருவனந்தபுரத்திலேயே தங்கி இந்த விமானத்தின் கோளாறைச் சரி செய்தனர்.

இதையடுத்து மூன்று வாரங்களுக்குப் பிறகு பிரிட்டன் போர்விமானம் ஜூலை ஆறாம் நாள் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்டுச் சென்ற காட்சி இன்று வெளியாகியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *