காவிரியின் குறுக்கே மேகத்தாட்டில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு..!

Advertisements
தமிழக காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாரத்தை பாதிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகத்தாட்டில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்து அனுப்பும் நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையம் 2 விவசாயிகள் முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு . தமிழக காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் வகையிலும், தமிழகத்தில் 22 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கும் வகையிலும்,
 கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகத்தாட்டில் அணை கட்டுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று தெரிவித்து 2025 – 26 ம் நிதி ஆண்டியின் பணி தொடங்க 9,000 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது,  இதற்கு தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும். தமிழகத்திலிருந்து கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையம் இரண்டில் இருந்து கர்நாடகாவுக்கு மின்சாரம் அனுப்புவதை நிறுத்த கோரி இன்று தமிழக விவசாய சங்கம் சார்பில் அனல் மின் நிலையம் 2 விவசாயிகள் முற்றுகையிட முயன்றவர்களை ஏழு அடுக்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர் இதனால் காவல்துறைக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது பின்னர் விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *