
375 ஆண்டுகள் நீருக்கடியில் மறைந்திருந்ததாக ஒரு கண்டத்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இது உலகின் 8ஆவது கண்டம் ஜீலந்தியா எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
பாறை மாதிரிகள் சிலவற்றை ஆய்வு செய்த அறிவியலாளர்கள், புதிய கண்டம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இக்கண்டம் 375 ஆண்டுகளாக நீருக்குள் மறைந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
கடல் தளத்திலிருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டத்தைக் கண்டுபிடித்துள்ளனர். ஆராய்ச்சியின் விவரங்கள் டெக்டோனிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தப் புதிய கண்டத்திற்கு விஞ்ஞானிகள் ஜீலந்தியா (Zealandia) என்று பெயரிட்டுள்ளனர். இது நியூசிலாந்துக்கு அருகே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கண்டத்தின் 94 சதவீத பகுதி நீருக்கு அடியில் மூழ்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக 49 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இந்தக் கண்டம் அமைந்துள்ளது.
நியூசிலாந்தை போலவே இங்கும் சில தீவுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். முன்னதாகப் பாறை மாதிரிகள் சிலவற்றை ஆய்வு செய்த அறிவியலாளர்கள், இந்தக் கண்டம் 375 ஆண்டுகளாக நீருக்குள் மறைந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இக்கண்டம் மடகாஸ்கர் தீவைக் காட்டிலும் 6 மடங்கு பெரியது. இதனுடன் சேர்த்து உலகில் மொத்தம் 8 கண்டங்கள இருப்பதாகப் புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
உலகில் தற்போது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா ஆகிய 7 கண்டங்களுள்ள நிலையில், தற்போது 8-ஆவது கண்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இக்கண்டமும் விரைவில் அங்கீகரிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

