Netanyahu:நாங்கள் அவங்களை அழிச்சிட்டோம்; நீங்க உஷாரா இருங்க; யாரை சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர்!

Advertisements

ஜெருசலேம்: ‘ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விடத் தற்போது பலவீனம் ஆகிவிட்டது’ என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாசுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனான் நாட்டில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் தாக்குதல் நடத்தியது. இதனால் ஹிஸ்புல்லா அமைப்பையும் களையெடுக்க முடிவெடுத்த இஸ்ரேல், சில நாட்களுக்கு முன் லெபனானில் தரைவழி தாக்குதலைத் துவங்கியது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், இப்ராகிம் அகீல், அலி கராகியென வரிசையாக ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஹிஸ்புல்லா அமைப்புத் தலைவர் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டார். நஸ்ரல்லா அடுத்த வாரிசு ஹஷேம் சபீதின் கதையையும் இஸ்ரேல் முடித்து விட்டதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், நஸ்ரல்லாவின் வாரிசான ஹஷேம் சபீதினை இஸ்ரேல் ராணுவம் கொன்றதை நெதன்யாகு உறுதிப்படுத்தினார்.

நாங்கள் ஹிஸ்புல்லா அமைப்பை அழித்துவிட்டோம். ஹிஸ்புல்லா அமைப்புத் தலைவர் நஸ்ரல்லா உட்பட ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளை நாங்கள் கொன்றுவிட்டோம். இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை உள்ளது. ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விடத் தற்போது பலவீனம் ஆகிவிட்டது.

மாற்றத்திற்கான வாய்ப்பை லெபனான் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் இப்போது உங்கள் நாட்டைத் திரும்பப் பெற்று அமைதி மற்றும் செழிப்புக்கான பாதைக்குத் திரும்பலாம். தங்கள் நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற லெபனான் மக்கள் நடவடிக்கை எடுக்கத் தவறினால் மோசமான விளைவுகள் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *